சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக வைரலாகி வந்து கொண்டிருந்தது. பொதுவாக சென்னையை பொறுத்தவரை காவலர்கள் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை எடுப்பது உண்டு.
பெரும்பாலும் இரவு நேரங்களில் வண்டியில் செல்பவர்களை சோதனை செய்வது என்பது சென்னையில் வாடிக்கையான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் ஒரு நபர் சோதனை செய்ய வந்த போலீஸிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
அவருடன் ஒரு பெண்ணும் கார்க்கு அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவலர்கள் என்னவென்று விசாரிக்க சென்ற பொழுது அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார் இந்த நபர். உடனே போலீசார் அதனை வீடியோ எடுக்க துவங்கி விட்டனர்.
போதையில் செஞ்சிட்டேன்:
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரே வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றெல்லாம் அந்த நபர் பேசி இருக்கிறார். பிறகு காரை எடுத்துக் கொண்ட அந்த நபர் சென்று விட்டார். இந்த நிலையில் போலீசார் யார் இந்த நபர் என்று தேடத் தொடங்கி இருக்கின்றனர்.
பொதுவாக போலீசாரிடம் சத்தம் போட்டுவிட்டு அப்படியெல்லாம் தப்பிவிட முடியாது. இந்த நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து நேற்று பிடித்திருக்கின்றனர். அப்பொழுது பேசிய அந்த நபர் அப்பொழுது நான் கொஞ்சம் போதையில் இருந்தேன். அதனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.
பிறகு இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்த பொழுதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளேன் என்று தெரிந்தது. போலீஸ் வருவார்கள் என்று தெரிந்துதான் காத்திருந்தேன் என்று கூறியிருக்கிறார். பிறகு அவர் இது குறித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் இருந்தாலும் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.








