Connect with us

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

lawarance shanmuga pandiyan

News

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Social Media Bar

Ragava Lawarance and Shamuga pandiyan : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் மதிப்பை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். அவரது இறப்பு என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக தமிழகத்திற்கு அமைந்தது.

எம்.ஜி.ஆர் கருணாநிதி இறப்பிற்கு பிறகு ஒரு பெரும் கூட்டம் ஒரு தலைவனுக்காக வந்ததே விஜயகாந்தின் இறப்பின் போது தான். விஜயகாந்த் தமிழ் திரையுலகில் பலருக்கும் பல நன்மைகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்தை போலவே பல நன்மைகளை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.

vijayakanth-4
vijayakanth-4

அப்பொழுது விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா கூறும் பொழுது தன்னுடைய மகன் சண்முக பாண்டியனை எப்படியாவது கதாநாயகன் ஆக்குங்கள் என்று கூறியிருந்தார். ஏற்கனவே சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் கூறும் பொழுது விஜயகாந்த் நம் தமிழ் மக்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். ஆனால் அவரது மகனை கதாநாயகன் ஆக்க வேண்டும் என்று பிரேமலதா அவர்கள் கேட்டுக் கொண்ட பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒருவரின் மகனுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பது மிகப்பெரும் தவறு எனவே சண்முக பாண்டியன் நடித்து வெளியாகும் திரைப்படத்தை எந்த அளவிற்கு விளம்பரப்படுத்த முடியுமோ அவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அதே போல இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதை ஏதாவது இருந்தாலும் கூட இயக்குனர்கள் என்னிடம் கூறுங்கள். நானும் சண்முக பாண்டியனும் அதில் சேர்ந்து நடிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

To Top