காஷ்மீரில் க்ரூப் போட்டோ வெளியிட்ட லியோ குழுவினர்! – இன்னிக்கு ட்ரெண்ட்!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கி வெளியாகும் அனைத்து திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பெறுகிறது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ.

Social Media Bar

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். எனவே இந்த படமும் ஒரு மாஸ் ஹிட் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. கடும் குளிரின் காரணமாக காஷ்மீரில் வெகு சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்து வருகின்றனர். படத்தில் நடிப்பவர்கள் பெயர்கள் வெளி வந்த போது அதில் கவுதம் மேனன் போன்ற ஒரு சிலர் பெயர் வரவில்லை.

ஆனால் காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை பார்க்கும்போது அதில் கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த புகைப்படம் தற்சமயம் பிரபலமாகி வருகிறது.