Actress
க்யூட் லுக்கில் போட்டோ வெளியிட்ட கௌரி கிஷான்.. இப்போ இதான் ட்ரெண்ட்..!
96 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷான். 96 திரைப்படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் கௌரிக்கு கிஷான் நடித்திருந்தார்.
அந்த ஒரு திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை கொடுத்தது தொடர்ந்து சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கௌரி கிஷான்.
இப்பொழுது அவருக்கு கதாநாயகியாக நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கி இருக்கின்றன அதில் முக்கியமான திரைப்படம் என்றால், எல்.ஐ.கே திரைப்படத்தை கூறலாம்.
விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார் கௌரி கிஷான். இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.
