Connect with us

10 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச தவறால் இப்பவும் பாதிக்கப்படுறேன்!.. இன்னொரு சான்ஸ் கிடைச்சா போதும்!. மனம் வருந்தும் லிங்குசாமி..

lingusamy

Latest News

10 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச தவறால் இப்பவும் பாதிக்கப்படுறேன்!.. இன்னொரு சான்ஸ் கிடைச்சா போதும்!. மனம் வருந்தும் லிங்குசாமி..

Social Media Bar

2001 இல் திரையில் வெளியான ஆனந்தம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பெரும்பாலும் லிங்குசாமி இயக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன.

ஆனால் அவரது முதல் படம் அவருக்கு அவ்வளவாக வெற்றியை தரவில்லை. அப்போது இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் லிங்குசாமியும் அதே ஃபார்மூலாவை பின்பற்றி அந்த படத்தை இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் ரன். ரன் திரைப்படம் எதிர்ப்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை பார்த்துவிட்டு தன்னை வைத்து திரைப்படம் இயக்குமாறு லிங்குசாமியிடம் ரஜினிகாந்தே கேட்டிருக்கிறார்.

அப்படியான வெற்றியை கொடுத்தது ரன், அதன் பிறகு சண்டக்கோழி, பையா என நிறைய வெற்றி படங்களை இயக்கினார் லிங்குசாமி. ஆனால் இறுதியாக அவர் இயக்கிய மூன்று திரைப்படங்கள் ஃப்ளாப் படங்களாகதான் அமைந்தன.

2014 இல் இவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு 4 வருடங்கள் கழித்து அவரது இயக்கத்தில் வந்த சண்டக்கோழி 2வும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் அஞ்சான் திரைப்படத்தை பொறுத்தவரை அதை மலைப்போல் நம்பியிருந்தார் லிங்குசாமி.

இந்த நிலையில் தற்சமயம் பேட்டியில் அஞ்சான் திரைப்படம் குறித்து பேசியிருந்தார் லிங்குசாமி. அதில் அவர் கூறும்போது அஞ்சான் திரைப்படம் இப்போதும் இளைஞர்கள் பலருக்கு பிடிக்கிறது. அந்த படத்தை எடிட் செய்யும்போது நான் எடிட்டிங்கில் கோட்டை விட்டு விட்டேன்.

அதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணம். இப்போது எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றால் மீண்டும் அதை எடிட் செய்து மறு வெளியீடு செய்வேன். அப்போது அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்கிறார் லிங்குசாமி.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top