Connect with us

இந்த நடிகைதான் லிவிங்க்ஸ்டன் மகளா… யாருக்குமே தெரியாம போச்சே?.

livingston daughter

News

இந்த நடிகைதான் லிவிங்க்ஸ்டன் மகளா… யாருக்குமே தெரியாம போச்சே?.

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் உதவி இயக்குனராக இருந்து அதற்குப் பிறகு காமெடி நடிகராக மாறியவர் நடிகர் லிவிங்ஸ்டன். நடிகர் லிவிங்ஸ்டன் முதன்முதலாக இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்படியே திரைக்கதைகளிலும் பல படங்களில் வேலை பார்த்த பொழுது அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படியாக சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதற்கு வாய்ப்புகள் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இருந்தாலும் கூட பன்முகத் திறமை கொண்டவர் லிவிங்ஸ்டன் என்பதால் அவரால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறலாம்.

jovitha

லிவிங்ஸ்டன் மகள்:

நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார். பொதுவாகவே பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வருவதுண்டு. அதேபோல லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதாவும் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று வந்தார்.

அவர் நடித்த முதல் திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை அதனை தொடர்ந்து சின்னத்திரை மீது கவனம் செலுத்திய ஜோவிதா பூவே உனக்காக என்கிற சீரியலில் நடித்தார்.

ஆனால் சின்னத்திரையில் நடிப்பது என்பது சினிமாவில் நடிப்பதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டதாக இருக்கும். எனவே அதுவும் செட் ஆகாத காரணத்தினால் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார் ஜோவிதா தற்சமயம் லிவிங்ஸ்டனின் இரண்டு மகள்களுமே சினிமாவில் நடிகை ஆவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top