Tamil Cinema News
அடுத்த படங்களில் விஜய்யை உள்ள கொண்டு வருவேன்… லோகேஷ் கொடுத்த அப்டேட்.!
தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முந்தைய திரைப்படங்களை விட இப்பொழுது அவர் இயக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜை பொருத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் மற்ற திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் வருவதை பார்க்க முடியும்.
லியோ திரைப்படத்தில் கூட கிளைமாக்சில் விக்ரம் லியோவிற்கு போன் செய்து பேசுவதாக ஒரு காட்சி இருக்கும். அந்த மாதிரி காட்சிகளை லியோ கதாபாத்திரத்திற்கு வைக்க முடியாது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அவர் நடிக்க வர மாட்டார் என்கிற நிலை இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது அடுத்த நான் இயக்கம் திரைப்படங்களிலும் லியோ கதாபாத்திரத்திற்கு ஒரு காட்சி இருக்க தான் செய்யும். அந்த லியோ என்கிற பெயரை பயன்படுத்திக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
