ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் தளபதி 67 – தெறிக்கவிடும் லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறை திரைப்படம் இயக்கும்போதும், முன்னர் எடுத்த படத்தை விடவும் அடுத்த படத்தை சிறப்பாக எடுக்கக்கூடியவர்.

Social Media Bar

அந்த வகையில் தற்சமயம் அவர் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் தளபதி 67. கிட்டத்தட்ட தளபதி ரசிகர்களே இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மிஷன் இம்பாசிபல் போல ஹாலிவுட் தரத்தில் தயாராக இருக்கிறதாம் தளபதி 67.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து இந்த படத்தை சிறப்பாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்புகள் எடுக்கப்பட உள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் கூட படப்பிடிப்புகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை லோகேஷ் கனகராஜ் திரைப்படம் எதற்குமே வெளிநாட்டில் பெரிதாக படப்பிடிப்பு செய்ததில்லை. இதனால் தளபதி 67 குறித்து மக்கள் மத்தியில் ஆவல் இன்னமும் அதிகரித்து வருகிறது.

தளபதி 67 அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.