Actor Karthi : சமயத்தில் காப்பாற்றிய சிவன் பாடல்!.. நடிகர் கார்த்திக்கு நடந்த சம்பவம்!..
Actor Karthi : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த கார்த்திக்கு தற்சமயம் வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
அதற்கு முன்பு வந்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக அனைத்தும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இந்த ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் ஆகும். இன்னும் பல படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி அவரது வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தை கூறியிருந்தார் நடிகர் ஸ்ரீமன் சிவனுடைய மிகப்பெரிய பக்தராக இருந்தார். எப்போதும் திருவண்ணாமலை சென்று வருவதை அவர்கள் ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கும் சிவன் மீது கொஞ்சம் ஆர்வம் வந்தது.

எனவே சிவன் குறித்து தினமும் சொல்வதற்கான மந்திரம் ஒன்று இருந்தால் சொல்லவும் என்று ஸ்டீமனிடம் கேட்டுள்ளார் கார்த்தி. இதை கேள்விப்பட்டதும் ஸ்ரீமன் அவருக்கு ஒரு மந்திரத்தை சொல்லி தந்துள்ளார் பெற்ற தாய் தன்னை மக மறந்தாலும் என துவங்கும் அந்த மந்திரம் ராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பா என்னும் நூலில் வரும் மந்திரம் ஆகும்.
அது கார்த்திக்கும் மிகப் பிடித்திருந்தது. அதனால் அதை அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தன்னை ஒரு சிவ பக்தனாகத்தான் வெளிப்படுத்து இருப்பார் கார்த்தி.
அப்படி நடிக்கும் போது ஒரு இடத்தில் சிவனின் மந்திரத்தை கார்த்தி சொல்வது போன்ற காட்சியை எழுதியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த இடத்தில் என்ன மந்திரம் சொல்வது என கேட்ட பொழுது உங்களுக்கு ஏதும் மந்திரம் தெரிந்தால் அதையே சொல்லுங்கள் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் தனக்கு ஏற்கனவே தெரிந்த அந்த திருவருட்பா மந்திரத்தை கூறி இருக்கிறார் கார்த்தி. அந்த காட்சிக்கு அப்பொழுதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.