News
இது கொஞ்சமும் எதிர்பார்க்காத சம்பவம்.. கில்லி மாதிரி சொல்லி அடிக்கும் லக்கி பாஸ்கர்.. ஐந்து நாள் வசூல் நிலவரம்..!
Full details of how much Dulquer Salmaan starrer Lucky Bhaskar has collected in five days of its release
தீபாவளியை முன்னிட்டு நிறைய திரைப்படங்கள் தமிழில் வெளியானது அப்படியாக வெளியான திரைப்படங்களில் பெரிதாக எதிர்பார்ப்பை பெறாமல் வெளியாகி அதே சமயம் எக்க சக்கமான வரவேற்பை தற்சமயம் பெற்று இருக்கும் திரைப்படமாக துல்கர் சல்மான் நடித்திருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படம் இருக்கிறது.
லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிகமான வரவேற்பை பெற துவங்கியது. இந்த நிலையில் போகப் போக இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து படத்திற்கான திரையரங்குகளும் அதிகரிக்க துவங்கியது.
5 நாள் வசூல் ரிப்போர்ட்:

இந்த நிலையில் தற்சமயம் அதிக வசூலை பெற்றிருக்கிறது லக்கி பாஸ்கர் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி இன்று வரை சேர்த்து சுமார் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 கோடி ரூபாய் தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத அளவிலான ஒரு வசூலை இந்த படம் கொடுத்திருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் மூலமாக 18 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது லக்கி பாஸ்கர். தமிழ் தமிழில் மூன்று கோடியும் மலையாளத்தில் எட்டு கோடியும் வசூல் செய்து இருக்கிறது. இது இல்லாமல் வெளிநாட்டு வசூல் மற்றும் மற்ற மாநிலங்களின் வசூல் என்று சேர்க்கும் பொழுது மொத்தமாக 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
