Latest News
மாமன்னன் படத்தில் நடிக்காமலே பாராட்டு வாங்கினேன்! வடிவேலு பதில் நடிக்க இருந்த பிரபல காமெடியன் சொன்ன சுவாரசிய தகவல்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி பெற்ற படம் மாமன்னன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்க படித்ததின் ஆனைத்து பாடல்களுமே ஹிட் தான். இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது. மேலும், இது தான் தந்து கடைசி பட, எனவும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.
இந்த படத்தினை பாமுதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார். இந்த படத்தில் வடிவேலு நடிப்பை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வியந்து போய் பாராட்டி இருந்தார்கள். காமெடியனாக அறியப்பட்ட வடிவேலு இந்த படத்தில் எமோஷனல் காட்சிகளில் அற்புதமாக நடித்திருந்தார்.
இதுவரை பார்க்காத வடிவேலுவாக நடித்து மக்கள் மத்தியில் வெறும் வரவேற்ப்பை பெற்றார் வடிவேலு. இந்த நிலையில் ,வடிவேலு கதாப்பாத்திரத்தில் தான் தான் நடிக்க இருந்ததாக பிரபல காமெடியன் ஒருவர் கூறியுள்ளது வைரல் ஆகி வருகிறது. மிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வேல்முருகன் தங்கச்சாமி மனோகர் என்கிற சார்லி தான் இந்த படத்தில் நடிக்க இருந்தாராம். அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது சார்லி தான் என முன்பே ஒரு செய்தி பரவியது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் சார்லி பதில் அளித்து இருக்கிறார்.
“பொதுவாக நடித்த பிறகு தான் நல்லா நடிச்சிருக்காங்க என பெயர் வரும். அந்த படத்தில் நான் நடிக்காமலேயே நிறைய பேர் என்னை பாராட்டி இருக்கிறார்கள். அவர் நடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்தார்கள். அந்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.”
“நிறைய படங்கள் நான் நடிப்பதாக இருந்து அதன் பின் வேறு நடிகர்களுக்கு சென்று இருக்கிறது, அதே போல மற்ற நடிகர்களின் ரோல்களுக்கு எனக்கு வந்து இருக்கிறது. பேசி உறுதியாகும் ரோலில் மட்டும் நான் ஒழுங்காக நடிக்கிறேன்” என சார்லி கூறி இருக்கிறார்.