மின்னலே பட ரீமேக்கில் எஸ்.கே… மாதவன் கொடுத்த அப்டேட்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அமரன் திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாக உள்ளது. அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களுக்குமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் மாதவனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் நடித்த மின்னலே திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்கிறோம் என்றால் அதில் யார் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த மாதவன் நடிகர் சிவகார்த்திகேயன் அதில் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் காதல் கதைகளில் பெரிதாக நடிப்பதில்லை.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாக அவர் நடிக்க துவங்கிவிட்டார்.