Tamil Cinema News
டிராகன் திரைப்படத்துக்கு போய் கடுப்பானதுதான் மிச்சம்… பதிவிட்ட ஸ்ரீகாந்த்.!
சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து முதல் படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். இந்நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் அடுத்து வெளியான திரைப்படம் டிராகன். டிராகன் திரைப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.
மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படம் கூட கொஞ்சம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் டிராகன் நல்லப்படியான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அந்த படத்திற்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்திற்கு சென்று திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பின்னால் சிலர் அமர்ந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் காட்சி வருவதற்கு முன்பே அடுத்து கதையில் என்ன நடக்க போகிறது என கூறி கொண்டே வந்தனர். எனக்கு மிகுந்த கோபம் வந்தது. ஆனால் என் மனைவி என் கையை பிடித்து சண்டை போட வேண்டாம் என கூறிவிட்டார் என அந்த விஷயங்களை பகிர்ந்திருந்தார் ஸ்ரீகாந்த்.
