நான் நயன்தாராவை குறிப்பிட்டு அப்படி பேசலை! –  விளக்கமளித்த மாளவிகா மோகனன்!

தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. சொல்ல போனால் உள்ள நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.

Social Media Bar

நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயர் உண்டு. இந்த பெயரை விமர்சித்து இடையில் மாளவிகா மோகனன் ஒரு பதிவிட்டிருந்தார். தமிழில் மாஸ்டர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஏற்கனவே அவர் நயன்தாராவை குறி வைத்து பேசுகிறார் என்று பேச்சுக்கள் இருந்தது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என நடிகைகள் பட்டம் வைத்துக்கொள்வது தவறு என கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது மிகவும் சர்ச்சையானது. மாளவிகா மோகனன் நேரடியாக நயன்தாராவைதான் குறிப்பிடுகிறார் என பேசி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மாளவிகா மோகனன் கூறும்போது சினிமாவில் எனக்கு மூத்தவர் நடிகை நயன்தாரா. அவரை நான் எப்போதும் மதிக்கிறேன். நான் அவரை குறிப்பிடும் விதமாக எந்த கருத்தையும் கூறவில்லை என கூறியுள்ளார்.