Box Office
பொங்கலையே கலவரமாக்கிய மத கஜ ராஜா… 10 நாள் வசூல் நிலவரம்..!
பொங்கல் மற்றும் தீபாவளி மாதிரியான சிறப்பு தினங்கள் எல்லாம் தொடர்ந்து படங்கள் வெளியிடுவதற்கான தினங்களாக உள்ளன. அதிலும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பல படங்களை பொங்கலுக்கு வெளியிடவே திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஆரம்பத்தில் விடாமுயற்சி திரைப்படம்தான் திரைக்கு வர இருந்தது. ஆனால் விடாமுயற்சி பட வேலைகள் முடியாத காரணத்தால் அந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. மாறாக பிப்ரவரி 6 ஆம் தேதி அந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு காத்திருப்பில் இருந்த நிறைய திரைப்படங்கள் களம் இறங்கின. அப்படியாக களம் இறங்கிய திரைப்படங்களில் மதகஜராஜா திரைப்படமும் ஒன்று.
12 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் மதகஜ ராஜா. இதனால் பொங்கல் ரேசில் மற்ற படங்களை முறியடித்து மத கஜ ராஜா முதல் இடத்தை பிடித்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு கூட மதகஜ ராஜா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த படம் இயக்குனர் சுந்தர் சி, விஷால், அஞ்சலி ஆகியோருக்கு முக்கிய படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மத கஜ ராஜா. படத்தின் வசூல் இன்னமுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
