Bigg Boss Tamil
என்னையும் பூர்ணிமாவையும் நல்லா யூஸ் பண்ணிக்கிட்ட!.. விஷ்ணுவால் கடுப்பான மாயா!.
Maya and Vishnu in Biggboss Tamil : மாயா, பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா, இவர்கள் நால்வரும்தான் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சண்டையில்லாமல் போனால் மக்களுக்கு நிகழ்ச்சி குறித்து எந்த சுவாரஸ்யமும் இருக்காது.
எனவே சண்டை போட கண்டிப்பாக ஆள் வேண்டும். போன முறை அசீம் ஜெயித்ததும் கூட அவருக்கு இருந்த சண்டை போடும் பண்பின் காரணமாகதான். எனவே பிக்பாஸ் என்றாலே சண்டை செய்ய வேண்டும்.
அதில் முதலிடம் விஷ்ணுவிற்குதான் என கூற வேண்டும். அவர் பிக்பாஸில் சண்டை செய்யாத நபர்களே கிடையாது. அந்த அளவிற்கு பிரச்சனைகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் பதவி விஷ்ணுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே அவரை வைத்து செய்யலாம் என காத்துக்கொண்டுள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். இந்த நிலையில் பெரிதாக ஷாப்பிங் செய்ய தெரியாத இருவரை தேர்ந்தெடுத்து ஷாப்பிங்கிற்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அனன்யா மற்றும் மாயாவை தேர்ந்தெடுத்தார் விஷ்ணு.
ஆனால் மாயா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. யாருமே சொல்லாமல் கூட என்னால் சரியாக பொருட்களை எடுத்து வர முடியும். நீங்கள் வேண்டுமென்றே என் மீது வன்மம் கொண்டு இப்படி சொல்கிறீர்கள் என கூறியுள்ளார். மேலும் மாயாவையும் பூர்ணிமாவையும் பயன்படுத்திதான் நீங்கள் கேப்டனாக ஆகியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்,
ஆனால் போட்டியில் ஜெயித்துதான் விஷ்ணு கேப்டனாக ஆனார் என்பது பார்த்த அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.