Connect with us

ஏன் நேத்து அப்படி கேவலமா பண்ணுனீங்க!.. மாயாவை ட்ரிக்கர் செய்த அர்ச்சனா!.. மாயாவுக்கே வா!.

archana maya

Bigg Boss Tamil

ஏன் நேத்து அப்படி கேவலமா பண்ணுனீங்க!.. மாயாவை ட்ரிக்கர் செய்த அர்ச்சனா!.. மாயாவுக்கே வா!.

cinepettai.com cinepettai.com

Biggboss Maya: பிக் பாஸ் துவங்கிய ஆரம்ப கட்டத்தில் பெரிதாக பேசப்படாமல் இருந்தாலும் கூட, எப்போது மாயா பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக மாறினாரோ அப்போது முதலே மாயா ஒவ்வொரு வாரமும் பேசப்படும் ஒரு போட்டியாளராக இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பிக் பாஸில் பயணித்து வருவதற்கும் அதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மாயா ஏதாவது ஒரு பேசப்படும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் இந்த வாரம் வாண்டடாக மாயாவிடம் சென்று அர்ச்சனா பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

நேற்று பிக் பாஸில் விக்ரமின் எலிமினேஷன் நடந்தது அனைவருக்கும் தெரியும். விக்ரம் எலிமினேஷன் ஆகும்பொழுது அவர் அனைவருக்கும் பிரியா விடை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மாயா மட்டும் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு அவருக்கு சரியாக விடை கொடுக்கவில்லை.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் மாயாவை விமர்சித்து வந்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் கேட்க நினைத்த அந்த கேள்வியை அர்ச்சனாவே மாயாவிடம் கேட்டார். எதற்காக அவர் கிளம்பி போகும் போது கூட அப்படி மூஞ்சை சோகமாக வைத்துக் கொண்டீர்கள் என்று கேட்ட பொழுது என்னுடைய எதிர்ப்பை எப்படி காட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும்.

நீங்கள் எதுவும் எனக்கு சொல்லித் தர வேண்டியது இல்லை நான் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை என்று அர்ச்சனாவை சத்தம் போட்டு உள்ளார் மாயா. ஏற்கனவே அர்ச்சனாவிற்கு ஓரளவு மக்கள் மத்தியில் நல் மதிப்பு இருந்து வரும் வேலையில் மாயா அதை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். மாயா ஏன் தொடர்ந்து தன்னை வில்லியாக காட்டிக் கொள்கிறார் என்பதும் புரியாத விஷயமாக இருக்கிறது.

POPULAR POSTS

vijay sree leela
kavin
vijay ghilli
vairamuthu-yaashika
vishal vijay ghilli
kpy bala
To Top