Connect with us

ஜெயலலிதா ஒரு பச்சோந்தி!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கொடுத்த பேட்டி!.. இப்படி ஒரு சண்டை நடந்துச்சா!..

MGR jayalalitha

Cinema History

ஜெயலலிதா ஒரு பச்சோந்தி!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கொடுத்த பேட்டி!.. இப்படி ஒரு சண்டை நடந்துச்சா!..

cinepettai.com cinepettai.com

எம்.ஜி.ஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் நல்லப்படியாக நடித்தால் தொடர்ந்து அவர்களுக்கு தனது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வருவார். ஆனால் அவர் வாய்ப்புகள் வழங்கியதே எம்.ஜி.ஆருக்கு பிரச்சனையாக முடிந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் துவங்கி இசையமைப்பாளர் வரை அவரது இஷ்டத்திற்குதான் இருக்க வேண்டும் என நினைக்க கூடியவர். எம்.ஜி.ஆருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகள் என்றால் அது லதா, ஜெயலலிதா, சரோஜா தேவி ஆகியோர்தான்.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் காதல் ஏற்பட்டப்பிற்கு பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் ஜெயலலிதாதான் கதாநாயகியாக நடித்தார். அடிமை பெண் படத்தில் கூட முதலில் சரோஜா தேவிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு அதில் ஜெயலலிதாவை நடிக்க வைத்துள்ளனர்.

MGR
MGR

இந்த நிலையில் ரிக்‌ஷாக்காரன் திரைப்படத்தில் ஜெயலலிதாவிற்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கலாம் என நினைத்த ஆர்.எம். வீரப்பன் அந்த படத்தில் மஞ்சுளாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். மஞ்சுளா ஜெயலலிதாவை விட இளமையாக இருந்ததால் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.

இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவருடன் நெருக்கமாக நடிப்பது ஜெயலலிதாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் கோபமான ஜெயலலிதா பத்திரிக்கை பேட்டியில் கண்டப்படி பேசி பேட்டி கொடுத்தாராம். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் ஜெயலலிதா ஒரு பச்சோந்தி என திட்டினாராம். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது சில நாட்கள் கூட நீடிக்காது.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top