Latest News
தமிழ் சினிமாவின் அறிவு ஜீவிகளே!.. ப்ளூ சட்டை மாறனை டேரக்ட் அட்டாக் செய்த விஜய் ஆண்டனி!..
இசையமைப்பாளராக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக மாறியிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. முன்பெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கூட விரைப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி கடந்த சில நாட்களாக ஜாலியாக ஆளாக மாறியுள்ளார்.
சமீபத்தில் பேட்டிகளில் பத்திரிக்கையாளர்களையே கலாய்ப்பது போன்ற கேள்விகளை கேட்டு வந்தார் விஜய் ஆண்டனி. தற்சமயம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ரோமியோ. பொதுவாக பெரும் நடிகர்கள் காதல் கதை மீது கை வைப்பதில்லை.
ஆனால் விஜய் ஆண்டனி துணிந்து காதல் திரைப்படமான ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். கதாநாயகன் கதாநாயகி இருவருமே தென் துருவம் வட துருவம் போல இருக்க அவர்களுக்குள் திருமணம் நடக்கிறது. அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.
இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு தகுந்தாற் போல ப்ளூ சட்டை மாறன் மாதிரியான சில சினிமா விமர்சகர்களும் இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இதுக்குறித்து பதிவு ஒன்றை போட்ட விஜய் ஆண்டனி பல நல்ல படங்களை விமர்சித்து கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும் இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை கூறும் அறிவு ஜீவிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க – ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. ஏனெனில் அன்பே சிவம் படமும் வெளியான போது தோல்வியை கண்டது. ஆனால் பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.