எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த தகராறு!.. சண்டையை நிறுத்த கவிஞர் செய்த ட்ரிக்…

தமிழில் ஒரு காலத்தில் சினிமாவில் பெரும் கலைஞனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். மாஸ் கதாநாயகனாக அப்போதே வலம் வந்த எம்ஜிஆர் தொடர்ந்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக இருந்த காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த பலருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு பெரிய விரோதமாக கருதாமல் சில நாட்களிலேயே மறந்து மன்னித்து விடுவார் எம்.ஜி.ஆர்.

அந்த வகையில் கவிஞர் கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆர்ருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ஏனெனில் சினிமாவில் நடிப்பு துறையில் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளோ அதே அளவு பாடல் துறையில் கண்ணதாசன் பெரிய ஆளாக இருந்தார்.

கிட்டத்தட்ட கதாநாயகர்களுக்கு நிகரான சம்பளத்தை கண்ணதாசன் வாங்கி வந்தார். இதேபோல ஒரு முறை பிரச்சினையாகி வெகு நாட்களாக இருவரும் பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதுவதற்கான வாய்ப்பை பெற்றார் கண்ணதாசன்.

அந்தப் படத்தில் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்கிற பாடலும் ஓடும் மேகங்களே என்ற பாடலும் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனே சண்டை எல்லாம் மறந்த எம்ஜிஆர் கண்ணதாசனிடம் சென்று பேசிவிட்டார். இப்படியான குணம் கொண்டவர் தான் எம்ஜிஆர் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் கவிஞர் வாலி.