திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்வதை அப்போதே அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ஆர்!.. சட்டத்தை ஏமாற்ற செய்த வேலையா?

Actor MGR: தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு மக்களிடமும் தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் ஆரம்பக்காலக்கட்டங்களில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதெல்லாம் நாடகங்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.

இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் தினசரி நாடகங்களை சென்று பார்த்து அதில் இருந்து அவர்கள் படத்திற்கான ஆட்களை தேர்வு செய்வார்கள். அப்படியாகதான் எம்.ஜி.ஆரும் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

Social Media Bar

எம்.ஜி.ஆர் சினிமாவிற்கு வரும்போதே அவருக்கு கலைஞர் மு கருணாநிதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அரசியல் ரீதியாக திமுக கட்சியின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பிறகு எம்.ஜி.ஆர் கட்சி துவங்குவதற்கும் முதலமைச்சர் ஆவதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.

திருமண வாழ்க்கை

என்னதான் மக்கள் மத்தியில் ஒரு சிறப்பான நடிகராகவும் அரசியல் தலைவராகவும் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்க்கை அவ்வளவு திருப்திக்கரமாக அவருக்கு அமையவில்லை என்றே கூற வேண்டும். எம்.ஜி.ஆருக்கு மனைவியாக வருபவர்களுக்கு ஆயுள் என்பது குறைவாகவே இருந்தது.

எம்.ஜி.ஆருக்கு இரண்டாவதாக சதானந்தவதி என்கிற பெண்ணுடன் திருமணம் ஆன பிறகும் கூட அவரது இல்லற வாழ்க்கை நல்லப்படியாக நடக்கவில்லை. இதற்கு நடுவேதான் அவருக்கு நடிகை வி.என் ஜானகி மீது காதல் உண்டானது.

mgr
mgr

இந்த நிலையில்தான் இருதார முறைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இதனால் ஆணோ பெண்ணோ ஒரே நேரத்தில் பலரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது. இதனால் திருமணம் செய்யாமலே வி.எம் ஜானகியுடன் வாழ துவங்கினார் எம்.ஜி.ஆர்

பிறகு அவரது இரண்டாவது மனைவி இறந்த பிறகு வி.என் ஜானகியை திருமணம் செய்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். இப்போது அனைவரும் அதிகமாக விமர்சனம் செய்யும் லிவிங் டூ கெதர் என்னும் முறையை அப்போதே அறிமுகம் செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.