ராம் இயக்குன படமா இது..! பறந்து போ திரைப்படம்.. எப்படியிருக்கு.. விமர்சனம்..

தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். பெரும்பாலும் ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே  அன்பை போதிக்கும் படங்களாகதான் இருக்கும்.

பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகளை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர் நடித்த சவரக்கத்தி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடித்தார் ராம்.

அதற்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் ராம் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் பறந்து போ. நடிகர் மிர்ச்சி சிவா இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காமெடி திரைப்படம்.

Social Media Bar

இந்த படத்தின் கதைப்படி மிர்ச்சி சிவா இயற்கை பொருட்களை விற்பனை செய்பவராக இருக்கிறார். அவரது மனைவி ஒரு புடவை கடையில் வேலை செய்கிறார். இதனால் சிவாவின் மகன் எப்போதும் தனித்தே இருக்கிறான்.

வீடு பள்ளியை விட்டால் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருப்பது போல அவனது வாழ்க்கை இருக்கிறது. இந்த நிலையில்தான் சிவாவுடன் வெளியில் செல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது.

அந்த பயணத்தில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுகிறது இந்த திரைப்படம். கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய ஒரு படமாக பறந்து போ திரைப்படம் உள்ளது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.