Cinema History
வாலியுடன் ஏற்பட்ட பிரச்சனை!.. பஞ்சாயத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்ற எம்.எஸ்.வி!..
Poet Vaali and MS viswanathan : திரைத்துறையில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு அடுத்து அவரை போலவே கவித்திறன் கொண்ட ஒரு நபராக வாலி இருந்தார். இதனால் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த ஒரு நபராக வாலி இருந்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் அதிக படங்களுக்கு வாலிதான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இறுதியாக காவிய தலைவன் என்கிற சித்தார்த் நடித்த திரைப்படத்திற்கு வாலி பாடல் வரிகளை எழுதினார். அவ்வளவு காலங்கள் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
வாலி தனது திறமை மீதுள்ள தைரியத்தால் எந்த ஒரு விஷயத்திலும் விட்டு கொடுத்து போகாத மனிதராக இருந்தார். இதனால் அவருக்கு நிறைய நபர்களுடன் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வளவு ஏன் எம்.ஜி.ஆருடனே ஓரிரு முறை இவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு தாய் மக்கள் என்ற படத்திற்கு எம்.எஸ். வி இசையமைத்தார். வாலி பாடல் வரிகளை எழுதினார். அப்போது ஒரு பாடலுக்கு எம்.எஸ்.வி முதலில் போட்ட இசையே இயக்குனர் மற்றும் வாலி இருவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த பாடல் எம்.எஸ்.விக்கு அந்த இசை பிடிக்கவில்லை.
ஆனால் வாலிக்கு அந்த இசை பிடித்ததால் அதை மாற்ற கூடாது என சாண்டையிட துவங்கிவிட்டார். இதனால் இந்த பிரச்சனை எம்.ஜி.ஆரிடம் சென்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கும் எம்.எஸ்.வி முதலில் போட்ட இசையே மிகவும் பிடித்தது. அதன் பிறகு சில நாட்கள் பேசாமல் இருந்த எம்.எஸ்.வியும் வாலியும் சில நாட்கள் கழித்து பேசிக்கொண்டனர்.
