காதல் ஆசையில் செத்து போன சிறுவனின்  பிரேத ஆத்மா.. முஞ்சியா பேய் படம் எப்படி இருக்கு!..

பேய் படங்கள் என்றாலே வழக்கம் போல கெட்டவர்களால் கொல்லப்பட்ட பேய் பிறகு தன்னை கொன்றவர்களை பழிவாங்க வருவதாகதான் கதை இருக்கும். ஆனால் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பேய் படங்களில் வழக்கமான டெம்பிளேட்டுகளில் இருந்து எவ்வளவோ மாறிவிட்டார்கள்.

அப்படியாக தற்சமயம் இந்தியாவிலும் மாற்றமாக வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் முஞ்சியா. நம் நிலத்திலேயே நிறைய பேய் கதைகளும் சாமி கதைகளும் உள்ளன. ஆனால் யாரும் அதை படமாக்குவதில்லை. அப்படியாக திரைப்படமாக்கப்பட்ட திரைப்படம்தான் முஞ்சியா.

படத்தின் கதை:

படத்தின் கதைப்படி பல வருடங்களுக்கு முன்பு பிராமண சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் அவனை விட 7 வயது அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அவனது வீட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Social Media Bar

மேலும் பிராமணருக்கு செய்யும் முடி மழிக்கும் தினத்தை அன்று செய்கின்றனர். அன்றைய இரவே தனது தங்கையை கிராமத்துக்கு அருகில் இருக்கும் காட்டுக்கு அழைத்து செல்லும் அந்த சிறுவன் அங்கு சாத்தான் வழிபாடு செய்கிறான்.

இறுதியாக ஒரு உயிரை அங்கு பழி கொடுக்க வேண்டும். அதற்கு தனது தங்கை உயிரையே பழி கொடுக்க பார்க்கிறான். ஆனால் தவறுதலாக அந்த போராட்டத்தில் அவன் இறந்துவிடுகிறான்.

முடி மழிப்பு நடந்து பத்து நாட்களுக்குள் உயிரிழக்கும் பிராமண சிறுவன் பிரம்ம ராட்சஷனாக உருவெடுப்பான். இதனால் அவனது சாம்பலை ஒரு மரத்தில் புதைத்து அதில் மந்திர கயிறுகளை கட்டி அவனை சிறை வைக்கின்றனர்.

அவன் தான் முஞ்சியாவாக அங்கேயே இருந்து வருகிறான். அவனால் அந்த மரத்தை தாண்டி எங்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து அந்த தங்கை கதாபாத்திரத்தின் பேரன் தெரியாமல் அந்த காட்டுக்குள் சென்று முஞ்சியாவிடம் மாட்டி கொள்கிறான்.

முஞ்சியா அவனது தோளில் வேதாளம் போல ஏறிக்கொண்டு அதன் இஷ்டத்திற்கு பயன்படுத்துகிறது. இதில் இருந்து அவன் எப்படி தப்பிப்பான் என்பதே கதையாக இருக்கிறது. இந்த படமும் ஹிந்தியில் வந்துள்ளது. தமிழ் டப்பிங்கில் தாமதமாக வரும் என பேச்சுக்கள் உள்ளன.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.