Tamil Cinema News
எந்த ஒரு ஹீரோவுக்கும் இயக்குனர் செய்யாததை ஜெயம் ரவிக்கு செய்த இயக்குனர்!. ஓப்பன் டாக் கொடுத்த ஜெயம் ரவி!.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது வரை சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் நடிகர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி தான் நடித்த கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி
ஜெயம் ரவி முதன் முதலில் தன்னுடைய சகோதரனின் இயக்கத்திலும், தந்தையின் தயாரிப்பிலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி என்னும் தன் பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்னும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்று இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு தாஸ், மழை, இதயத் திருடன், சம்திங் சம்திங் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது. பிறகு தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்தார். இதைப்பற்றி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் பற்றி ஜெயம் ரவி கூறியது
பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனராக ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார்.
ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் பற்றி கூறும் போது, அவர் கோமாளி படத்தின் கதையை கூறும் போது எனக்கு விருப்பமில்லை. இந்த படம் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் என்னிடம் உங்களுக்கு இந்த படத்தில் பிடித்த சீக்வன்ஸ் ஒன்றை கூறுங்கள் நான் சென்று அந்த சீக்வன்ஸ் மட்டும் உங்களுக்கு எடுத்து காமிக்கிறேன் எனக் கூறினார். நானும் அந்த படத்தில் வரும் ஒரு சீக்குவன்ஸ் ஒன்றை கூறினேன். அது தன்னுடைய முன்னாள் காதலியை தன் நண்பனை கூட்டிக்கொண்டு பார்ப்பதற்காக செல்லுவான்.
அந்தப் பெண்ணிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தையும் இருக்கும். அப்போது அந்தப் பெண்ணை பார்க்கும்போது பயத்தில் அவனுக்கு வியர்க்கும் இது நகைச்சுவையான காட்சி என்றாலும், அதிலும் ஒரு உண்மை தன்மை இருக்கும். இதை எப்படி பிரதீப் ரங்கநாதன் பண்ணுவார் என நான் அவரிடம் இந்த சீக்வன்ஸை கூறினேன்.
பிரதீப் ரங்கநாதன் இரண்டு நாட்களில் அந்த காட்சியை எடுத்து வந்து என்னிடம் காட்டினார். அந்த சீன் அற்புதமாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து விட்டேன் என்று பிரதீப் ரங்கநாதனை பற்றி ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.