Connect with us

அந்த மூணு ஹீரோயின்ல அந்த ஹீரோவோட மனைவிதான் சூப்பர்.. எஸ்.ஜே சூர்யா சொன்ன பதிலை பாருங்க!.

sj surya actress

Latest News

அந்த மூணு ஹீரோயின்ல அந்த ஹீரோவோட மனைவிதான் சூப்பர்.. எஸ்.ஜே சூர்யா சொன்ன பதிலை பாருங்க!.

Social Media Bar

தென்னிந்திய சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களை எல்லாம் விட பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட எஸ்.ஜே. சூர்யா அதன் பிறகு பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.

தற்போது இவர் இயக்கிய குஷி படத்தை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் எஸ். ஜே. சூர்யா

திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா ஆகிய பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா.

கடந்த 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவர் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி திரைப்படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனராக பலராலும் அறியப்பட்டார்.

அதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய திரைப்படங்களில் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களிலும் நடித்தார்.

sj suriya

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, கடமையைச் செய், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார்.

தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலமும், தனக்கே உரித்தான ஸ்டைலில் அவர் நடிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் எஸ்.ஜே. சூர்யாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது அவரை அனைவரும் நடிப்பு அரக்கன் என்று அழைத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா தற்போது யார் படம் வெளிவந்தாலும் அதில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஹீரோயின்களில் எனக்குப் பிடித்த நடிகை இவர் தான்

இவர் தெலுங்கில் நானி நடித்துள்ள படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தத் திரைப்படம் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகை மற்றும் எஸ். ஜே. சூர்யா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்கள்.

kushi jodhika

அப்போது தொகுப்பாளர் குஷி திரைப்படம் 3 மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்டார்கள். அதற்கு எஸ்.ஜே. சூர்யா எனக்கு ஜோதிகாவை பிடிக்கும் என கூறினார்.

பிறகு தெலுங்கில் ஒரு படம் ஷூட்டிங்கில் இருந்தபோது ஒரு பெண் ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அப்போது அவர் கூறினர் மூன்று குஷி படங்கள் பார்த்திருக்கிறேன் எனக்கு பிடித்த நடிகை பூமிகா என்று கூறியதாக அவர் கூறினார். மக்களுக்கு ஒவ்வொருவரை பிடிக்கும்.

அதுபோல ஹிந்தியில் முன்னணி நடிகையான கரீனா கபூர் நடித்திருப்பார். அவரும் நன்றாக நடித்திருப்பார் என அவர் கூறியிருக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top