Cinema History
சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இருக்கும் வருத்தம்.. வெளிப்படையாக கூறிய தேவா..!
தமிழில் பிரபலமாக இருக்கும் இசை கலைஞர்களில் கானாவிற்கு மிகவும் பிரபலமானவர் கானா இசை கலைஞர் தேவா. கிராமிய இசைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.
பெரும்பாலும் இசையமைப்பாளர் தேவாவை ஒரு கானா பிரபலமாகதான் பலருக்கும் தெரியும். கானா பாடல்கள் போடுவதில் பிரபலமானவர் தேவா என்றுதான் அனைவரும் கூறுவார்கள்.
ஆனால் மெலோடி பாடல்களிலும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. ஆனால் அந்த பாடல்கள் எல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்பது பெரும்பாலும் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது.
கவலைப்பட்ட இசையமைப்பாளர் தேவா:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேவா இப்போதைய காலகட்டத்தில்தான் நிறைய பேருக்கு நான் போட்ட பல பாடல்கள் என்னுடைய பாடல்கள் என்பதே தெரிந்திருக்கிறது. இதற்கு முன்பு அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை.
சில இசை நிகழ்ச்சிகளுக்கு நான் செல்லும் பொழுது எனது பாடல்களில் எந்தெந்த பாடல்களை பாட போகிறேன் என்று கேட்பார்கள். அப்பொழுது நான் ஒரு லிஸ்ட் கொடுப்பேன். அதில் எனது மெலோடி பாடல்களை பார்த்துவிட்டு நீங்கள் இசையமைத்த பாடல்களை மட்டும் பாடுங்கள் இந்த பாடல்கள் எல்லாம் வேண்டாம் என்று கூறுவார்கள்.
அப்பொழுது எல்லாம் அவர்களிடம் இதுவும் நான் இசையமைத்த பாடல் தான் என்று விளக்கிக் கொண்டிருப்பேன். அதனை நினைக்கும் போது இப்பொழுதும் வருத்தமாகதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் தேவா.