Cinema History
அண்ணான்னு கூப்பிட்டா நடிக்கவே மாட்டேன்.. விஜயகாந்தை கடுப்பேத்திய நளினி!.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாம் ஒரு காலத்தில் வரிசையாக ஹிட் கொடுத்து கொண்டிருந்தன. நளினி சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்தில் இவர் நளினியுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இதுக்குறித்து நளினி ஒரு பேட்டியில் கூறும்போது “நான் எப்போதும் விஜயகாந்தை அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பேன். அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போதும் கூட அவரை அண்ணா என்றே அழைப்பேன். இதனால் கடுப்பான விஜயகாந்த் இனி அண்ணா என கூப்பிட்டால் உன் கூட நடிக்க மாட்டேன். மாமா என்றாவது கூப்பிடு என கூறினார்.
ஆனால் எனக்கு மாமா என்றெல்லாம் அழைக்க வராது என்று கூறினேன். குறைந்தப்பட்சம் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போதாவது அண்ணா என அழைக்காமல் இரு என கூறினார் விஜயகாந்த்” இவ்வாறு ஒரு பேட்டியில் நளினி கூறியுள்ளார்.
