நம்பியாருக்கு இருந்த அந்த நல்ல பழக்கம்!.. விஜய் அஜித் எல்லாம் கத்துக்கணும்!..
Actor MGR and Nambiyar : தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் நம்பியார். நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதராக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக திட்டு வாங்கிய ஒருவராக நம்பியார் இருந்திருப்பார்.
ஏனெனில் அப்போது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் க்கு வில்லனாக நடித்து வந்தார் நம்பியார். அந்த நிலையில் ஏதாவது படப்பிடிப்பிற்கு சென்றால் கூட அங்கு நம்பியாருக்கு கிராம மக்கள் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்களாம்.
அவரை கண்டாலே பயப்படுவார்களாம் இந்த விஷயங்களை எல்லாம் நம்பியாரே பல இடங்களில் கூறியிருக்கிறார். இருந்தாலும் நம்பியாரிடம் சினிமாவில் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. எப்போதுமே நம்பியார் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பொறுத்துதான் சம்பளம் வாங்குவாராம்.

கதாபாத்திரம் பெரிதாக மதிப்பில்லாத ஒரு கதாபாத்திரமாக இருந்தால் அதற்கு ஏற்ற அளவிலான சம்பளத்தை மட்டுமே வாங்குவாராம். அப்போது தன்னுடைய மார்க்கெட் எவ்வளவு இருக்கிறது அதை பொறுத்து எவ்வளவு அதிகமாக வாங்கலாம் என்று நம்பியார் எப்போதுமே யோசித்தது கிடையாது.
இது குறித்து சித்ரா லெட்சுமணன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது நம்பியார் என்னுடைய தயாரிப்பில் நான்கு படங்களில் நடித்தார். அந்த நான்கு படங்களுக்குமே ஒரே சம்பளம் தான் வாங்கினார். அவருடைய கதாபாத்திரத்திற்கு அந்த சம்பளம் தான் சரியானது என்று அவரே கூறுவார் என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு சம்பள விஷயத்தில் நேர்மையுடன் நடந்து கொண்ட நபராக நம்பியார் இருந்திருக்கிறார்.