Tamil Cinema News
நீங்க விளக்கம் கொடுத்தாகணும்.. நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்..
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது முதலே அது தொடர்பான சர்ச்சைகள் என்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் சிலவற்றை படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதற்காக தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார்.
ஏனெனில் நானும் ரவுடிதான் படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் தனக்கே சொந்தம் என்று தனுஷ் பேசி இருந்தார். ஆனால் படத்தின் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட காட்சிகளை தான் பயன்படுத்தினோம் அதுவும் விக்னேஷ் சிவன் கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் என்று விளக்கம் தந்திருந்தார் நயன்.
இருந்தாலும் இது ஒரு பக்கம் பிரச்சனையாக சென்று கொண்டே இருக்கிறது இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் உரிமைத்தை வைத்துள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் ஏற்கனவே நெட்ப்லிக்ஸ் மற்றும் நயன்தாராவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியதாக கூறுகிறது.
அதன்படி இந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இருந்தாலும் கூட அந்த காட்சிகள் நீக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் மூலமாக வழக்கு ஒன்றை தொடுத்திருக்கின்றனர் இந்த நிலையில் ஏன் காட்சியை நீக்கவில்லை என்பதற்கு நயன்தாரா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பொழுது இன்னும் பெரிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறார் நயன்தாரா.
