பொது இடத்தில் சிறுவன் செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த நிவேதா பெத்துராஜ்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.!
தமிழில் ஒரு நாள் கூத்து மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஓரளவு வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பெரிய நடிகைகள் அளவுக்கு பிரபலம் கிடையாது என்றாலும் கூட மக்கள் மத்தியில் அறியப்படும் ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிவேதா நிவேதா பெத்துராஜ் பிறகு சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.
இதனால் சில காலங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தார் நிவேதா பெத்துராஜ் இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த பொழுது நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

சாலையில் நடந்த நிகழ்வு:
சென்னையில் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு சிறுவன் தன்னிடம் வந்து புத்தகத்தை விற்று கொண்டிருந்தான். சரி புத்தகம் தானே விற்கிறான் என்று அவனிடம் 100 ரூபாய் நீட்டினேன். அவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான்.
500 ரூபாய் எல்லாம் தர முடியாது என்று அந்த புத்தகத்தை அவனிடமே திரும்ப கொடுத்தேன். ஆனால் அவன் அந்த புத்தகத்தை என்னுடைய காருக்குள் தூக்கி எறிந்து விட்டு அந்த 100 ரூபாயும் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
இதனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். உங்களுக்கும் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை போட்டிருந்தார் நிவேதா பெத்துராஜ் இது தற்சமயம் பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.