Connect with us

கமலால் கை விடப்பட்ட சிம்பு… கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. நிலைமை இப்படி ஆயிடுச்சே?..

sivakarthikeyan simbu

Tamil Cinema News

கமலால் கை விடப்பட்ட சிம்பு… கை கொடுத்த சிவகார்த்திகேயன்.. நிலைமை இப்படி ஆயிடுச்சே?..

Social Media Bar

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல் மீண்டும் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். பெரும்பாலும் நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

அப்படியான கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் திரும்பவும் ஒரு பெரிய தயாரிப்பாளராக ஆக முடியும் என்பது கமலின் ஆசையாக இருந்து வருகிறது அதற்கு தகுந்தார் போல அவரது தயாரிப்பில் உருவான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்று தந்து வருகிறது.

130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். ஆனால் வெளியான 4 நாட்களுக்கு உள்ளாகவே 125 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது அமரன் திரைப்படம். தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கர்நாடகா மற்றும் வட இந்தியா முழுக்கவுமே அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

simbu
simbu

இன்னும் போக போக அமரனின் வசூல் என்பது அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமரன் திரைப்படம் எடுத்த அதே சமயத்தில் தான் நடிகர் சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வந்தார் கமலஹாசன்.

சிம்புவுக்கு வந்த பிரச்சனை:

இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வந்தார் இந்த நிலையில் திரைப்படத்தின் பட்ஜெட் அதிகரித்து வந்ததால் பாதியிலேயே கமல்ஹாசன் அந்த படத்தின் படபிடிப்பை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஏனெனில் கமல் நடித்து வரும் தக் லைப் திரைப்படத்தையும் கமல்தான் தயாரித்து வருகிறார். சிம்பு படத்திற்கு தயாரிப்பதன் மூலம் தக் லைஃப் திரைப்படத்திற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் போய்விடும் என்கிற நிலை கமலுக்கு ஏற்பட்டது.

எனவே சில நாட்கள் இந்த படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார் கமலஹாசன் இதனை அடுத்து சிம்பு அடுத்ததாக வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். அதன் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் தற்சமயம் அமரன் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்த காரணத்தினால் சிம்பு திரைப்படத்தை இயக்குவதற்கான பணம் கமல்ஹாசனுக்கு கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமல்ஹாசனே சிம்புவை கைவிட்ட போதும் நல்ல கலெக்ஷனை கொடுத்து சிவகார்த்திகேயன் அவரைக் காப்பாற்றி இருக்கிறார் என்று பேசி வருகின்றனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top