எப்ப பார்த்தாலும் தீவிரவாதிய பிடிக்கிறதுதான் உங்க கதையா? –  விஜயகாந்தை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பெரும் கதாநாயகனாக இருந்தவர் நடிகர் விஜய்காந்த். 2000 காலக்கட்டத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான பல திரைப்படங்களில் அவர் ஒரு புரட்சிக்கரமான கதாநாயகனாக தோன்றினார்.

அதனால் அதிகப்பட்ச திரைப்படங்களில் போலீஸாக தோன்றினார். சில படங்களில் தீவிரவாதிகளை தேடி கண்டுப்பிடிப்பதே கதையாக இருந்தது. ஆனாலும் மக்களுக்கு அப்படியான படங்கள் மிகவும் பிடித்திருந்ததால் அவர்களும் தொடர்ந்து இந்த மாதிரி படங்களை பார்த்து வந்தனர்.

2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வல்லரசு என்கிற திரைப்படம் தயாரானது. இந்த படத்தில் இயக்குனர் பி.வாசுவும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திலும் கூட விஜயகாந்த் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கும் ஒரு கதாநாயகனாகவே இருந்தார்.

Social Media Bar

அப்போது பி.வாசுவிற்கு ஒரு சந்தேகம் வந்தது. எல்லா திரைப்படத்திலும் இவர் ஏன் தீவிரவாதிகளை பிடிப்பவராகவே நடிக்கிறார் என யோசித்தார். எனவே இந்த சந்தேகத்தை அவர் விஜயகாந்திடமே கேட்டார். ஏன் சார் எப்போதும் தீவிரவாதிகளை பிடிக்கிற மாதிரியே படம் நடிக்கிறீங்க என கேட்டார் வாசு.

அதற்கு விஜயகாந்த் சிரித்துக்கொண்டே படம் வெளியாகும்போது பாருங்க என கூறினார். அதே போல படம் வெளியான பிறகு பெரும் ஹிட் கொடுத்தது. மக்கள் விஜயகாந்தை என்னவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இதன் மூலம் பி.வாசு புரிந்துக்கொண்டார்.