ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலம்தான் நம்ம இருண்ட காலம்!.. பதற வைத்த பா.ரஞ்சித்தின் பேச்சு!..
Director Pa.Ranjith : அரசியல் குறித்து பிரபலங்கள் பேசுவது என்பது எப்போதும் தமிழ் சினிமாவில் நடந்து வரும் ஒரு விஷயம்தான். ஏனெனில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நடுவே அவ்வளவு நெருங்கிய தொடர்புண்டு.
ராஜராஜ சோழனை குறித்து கூட பல பிரபலங்கள் பல வகையில் பேசி இருக்கின்றனர். ராஜராஜ சோழன் தமிழ் மக்களின் ஒரு பெரும் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில் அவரைக் குறித்து சர்ச்சையான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இதற்கு முன்பு வெற்றிமாறனும் கமல்ஹாசனும் கூட ராஜராஜசோழன் குறித்து கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூறும் பொழுது பார்ப்பனர் என்கிற அடையாளத்திற்குள்ளும் இந்து என்கிற அடையாளத்திற்குள்ளும் ராஜராஜ சோழனை கொண்டு செல்கின்றனர் ஆனால் அப்படிப்பட்டவர் கிடையாது ராஜராஜ சோழன். என்று அவரை குறித்து பெருமையாக தான் கூறியிருந்தனர்.
ஆனால் பா. ரஞ்சித் கூறும் பொழுது ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் தமிழகத்தில் இருண்ட காலம் என்று கூறியிருக்கிறார் .மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சிலரும் கூட தங்கள் சாதி சாதியை சேர்ந்தவர்தான் ராஜராஜ சோழன் என்று கூறுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தேவை இல்லை. ராஜராஜசோழன் என்னுடைய ஜாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று கூறியிருந்தார். அந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகின்றன பலரும் தமிழரின் அடையாளமான ராஜராஜ சோழரை இப்படி இழிவாக பேசுவது சரிதானா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்