Connect with us

இப்பக்கூட விஜய்க்கு 3 கதை வெச்சுருக்கேன்..! – ரூட்டு போடும் “ஊர்” இயக்குனர்!

Beast

News

இப்பக்கூட விஜய்க்கு 3 கதை வெச்சுருக்கேன்..! – ரூட்டு போடும் “ஊர்” இயக்குனர்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் மக்கள் இயக்கம் என பிஸியாக இயங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ஒரு மாலை ஹைஜேக் செய்வதை மையப்படுத்திய இந்த கதை ரசிகர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை. படம் வெளியானது முதலே சுமாரான விமர்சனங்களே கிடைத்தாலும் ஓரளவு லாபமாகவே இந்த படம் முடிந்துள்ளது.

சமீப காலமாக விஜய் புதிய இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதில் லோகேஷ் மாதிரி சிலர் ஹிட் கொடுத்தாலும் பலர் சொதப்பி விடுகின்றனர். இதனால் புது இளம் இயக்குனர்கள் படத்தில் நடிப்பது குறித்தே யோசனையில் இருக்கிறாராம் விஜய்.

Beast

இந்த நிலையில்தான் விஜய்யை வைத்து படமெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார் நமது “ஊர்” பட பிரபல இயக்குனர் பேரரசு. இவர் விஜய்யை வைத்து இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி எல்லாமே அந்த டைமில் செம ஹிட்.

சமீபத்தில் பீஸ்ட் தோல்வி குறித்து பேசிய பேரரசு ”ஒரு படம் எடுத்து ஹிட் கொடுத்த இளம் இயக்குனர்களை நம்பி விஜய் இறங்குவது சரியானது அல்ல. மேலும் விஜய் தான் நடிக்கும் படத்தின் கதையை தெளிவாக கேட்டப்பிறகே நடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Perarasu

மேலும் தான் விஜய்க்காகவே மூன்று கதைகள் எழுதி வைத்துள்ளதாகவும், விஜய் வாய்ப்பு கொடுத்தால் அந்த கதையை அவரிடம் சொல்லி ஓகே செய்யும் திட்டமுள்ளதாகவும் பேரரசு கூறியுள்ளார். ஆனால் பேரரசுவின் படங்கள் அந்த காலத்திற்கு விஜய்க்கு செட் ஆனது. இப்போது செட் ஆகுமா என்பது டவுட்டுதான் என சொல்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top