விஜய்யின் வார்த்தையால் மனம் மாறிய பாமக, விசிக… கேப்டனுக்கு கூட நடக்காத அந்த விஷயம்.. அரசியலில் விஜய்யின் அடுத்த அடி.!

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது அரசியல் களத்தில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இந்தியா பல கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடாக இருந்தாலும் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறைதான் பல வருடங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்சி ஒன்று துவங்கி மக்கள் மத்தியில் இந்த தி.மு.க அ.தி.மு.க கட்சிகள் அளவிற்கான பெரிய இடத்தை பிடிப்பது என்பது இதுவரை நடக்காத விஷயமாக இருந்து வருகிறது.

இந்த வாய்ப்பு என்பது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு இருப்பதாக ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அனைவரையும் அசர வைக்கும் வகையில் மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார் விஜய்.

விஜய்க்கு வந்த ஆதரவு:

tvk
tvk
Social Media Bar

அதில் பேசிய விஷயங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும் மற்ற கட்சிகள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றன. கூட்டணியை பொறுத்தவரை விஜய் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பதற்கு தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டணியில் தன்னுடன் வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு உண்டு என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் பாமக மற்றும் விசிக கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேரடியான ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் பாமக மற்றும் விசிக கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது கூட எடுத்த உடனே இப்படியான ஆதரவுகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.