Tamil Cinema News
இரண்டாவது படத்திலேயே இவ்வளவு சம்பளமா? டிராகன் படத்துக்காக பிரதீப் வாங்கிய சம்பளம்?.
தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் சம்பளமும் அதிகரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்கிற திரைப்படத்தின் வழியாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படமே காமெடியாக நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து அடுத்த படத்தில் கதாநாயகனாக களம் இறங்கினார் பிரதீப். கதாநாயகனாக அவர் நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்தது. முதல் படத்திலேயே பிரதீப் ரங்கநாதனை அனைவரும் கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர் என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது நடிப்பில் டிராகன் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த படத்திற்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தில் பிரதீப் வாங்கிய சம்பளம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி பார்க்கும்போது பிரதீப் டிராகன் திரைப்படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். மற்ற நடிகர்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டாவது படத்திற்கே இது அதிக சம்பளம் என்கின்றனர் நெட்டிசன்கள்.
