News
அத்தனை அழகிகளும் ஒரே போட்டோவில்..! வாய் பிளந்த பிரேம்ஜிக்கு நடிகை சொன்ன பதில்!
தென்னிந்திய சினிமாவில் சமீப காலங்களில் இளம் நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா, காஜல், சமந்தா என பலர் தென்னிந்திய சினிமா மார்க்கெட்டை நீண்ட காலமாக கைக்குள் வைத்திருந்தனர்.
இப்போது பிரியங்கா மோகன், க்ரித்தி ஷெட்டி, சாய் பல்லவி என இளம் நடிகைகளால் தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனமும் நிறைந்து வருகிறது. சமீபமாக பிரியங்கா மோகன் டாக்டர், டான் படங்கள் மூலமாக கவர்ந்துள்ளார்.

தற்போது தென்னிந்திய மொழி சினிமாக்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக உள்ள பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி மற்றும் சாய் பல்லவி என 4 அழகிகளும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டபோது செல்பி எடுத்துள்ளார்கள்.
இதை தனது ட்விட்டரில் பதிவிட்ட கல்யாணி பிரியதர்ஷன் ”ஒரு போட்டோ எல்லாரையும் ஆள போகிறது” என கேப்சன் போட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த நடிகர் பிரேம்ஜி, ஒரு நபர் கண்ணாடியை கழற்றிவிட்டு வாய் பிளந்து பார்ப்பது போன்ற படத்தை போட்டுள்ளார்.
அதற்கு கல்யாணி பிரியதர்ஷன் “இதை நான் எதிர்பார்த்தேன்” என கூறியது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
