News
அது மட்டும் நடக்கலைனா என் நிலைமை மோசமாயிருக்கும்.. அதுனால தயவு செஞ்சு நடிகைகளை அப்படி பண்ணாதீங்க.. ப்ரியா பவானி சங்கர்..!
தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் முக்கியமானவராக நடிகை பிரியா பவானி சங்கர் இருந்து வருகிறார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு நாடகங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கருக்கு மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
அதற்குப் பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் தோல்வியை கொடுத்தார் பிரியா பவானி சங்கர். அதற்குப் பிறகு ப்ரியா பவானிசங்கரை தொடர்ந்து தோல்வி நடிகை என்று பலரும் பேச துவங்கினர். இயக்குனர் ஹரி இயக்கிய யானை , ரத்னம் மற்றும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 ஆகிய மூன்று திரைப்படங்களிலும் பிரியா பவானி சங்கர் தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஓப்பனாக கூறிய பிரியா பவானி சங்கர்:
இந்த மூன்று படங்களும் தோல்வியை கண்டன. இதனால் சமூக வலைதளங்களில் அதிக கேலிக்கு உள்ளானார் பிரியா பவானி சங்கர். பிறகு டிமான்டி காலனி 2 திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் இது குறித்து பேட்டியில் பேசிய ப்ரியா பவானி சங்கர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் சரியில்லை என்று அதை திட்டினால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையை பலரும் மோசமாக பேசினார்கள் அது தவறு.
எனக்கு இந்த மாதிரியான மன வருத்தங்கள் ஏற்படும் போது அதை சரி செய்து கொள்வதற்கு உறவுகள் இருக்கின்றன ஆனால் அந்த மாதிரி உறவுகள் இல்லாதவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்று விடுவார்கள் மேலும் டிமான்டி காலனி 2 திரைப்படம் வந்ததால் நான் தப்பித்தேன் இல்லையென்றால் எனது நிலைமை என்னவாக இருக்கும் என்று கேட்டிருந்தார் பிரியா பவானி சங்கர்.
