தலைவர் 174 ஆவது கொடுங்க!.. லைன் அப்பில் காத்திருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!..

இவ்வளவு வயதான பிறகும் கூட ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் இன்னமும் குறையாமல்தான் இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் வருகிற ஜூன் முதல் லோகேஷ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் வேறு நடிக்க இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்துவிட்டு 174 ஆவது படத்தை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கேட்டுள்ளாராம். ஆனால் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில்ராஜ் ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே ரஜினிகாந்திற்கு இத்தனை திரைப்படங்கள் லைன் அப்பில் இருப்பதால் அவருடைய வாய்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளாராம் தில்ராஜ். இவர் தமிழில் விஜய்யை வைத்து வாரிசு என்கிற திரைப்படத்தை ஏற்கனவே தயாரித்துள்ளார்.