Connect with us

நயன்தாரா ஆடுறதை பாக்குறீங்க!.. கொஞ்சம் இவங்க ஆடுறதையும் பாருங்க!.

nayanthara raghava lawarance

News

நயன்தாரா ஆடுறதை பாக்குறீங்க!.. கொஞ்சம் இவங்க ஆடுறதையும் பாருங்க!.

Social Media Bar

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு இயக்குனர், நடிகர் என பலவகைப்பட்ட துறைகளில் தனது கால் சுவடுகளை பதித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து வருகிறார் லாரன்ஸ்.

இதனாலேயே லாரன்ஸின் மீது பொதுமக்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அதே போல மாற்று திறனாளிகளுக்கு நடனம் கற்றுத்தருவதை பல வருடங்களாக செய்து வருகிறார் லாரன்ஸ். முனி மாதிரி அவர் இயக்கிய திரைப்படங்களில் தொடர்ந்து இவர்கள் நடனமாடுவதற்கு வாய்ப்பளித்துள்ளார் லாரன்ஸ்.

தற்போது ராகவா லாரன்ஸ் தனது மாற்று திறனாளி குழு சார்பில் மல்லர் கம்பம் சாகச நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸும் கலந்துக்கொண்டார். மேலும் இதுக்குறித்து அவரது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

raghava-lawarance
raghava-lawarance

எனக்கு எப்போதும் தன்னம்பிக்கையை அளிப்பது இந்த மாற்று திறனாளி குழுவினர்தான். எனக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்போது எல்லாம் இவர்கள் ஆடுவதை பார்த்து ஊக்கம் அடைவேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்களை நான் எனது படங்களில் நடனமாட வைப்பேன்.

நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அதே போல நம் படங்களில் இவர்கள் ஆடுவதையும் மக்கள் பார்க்கட்டும். மல்லர் கம்பம் என்பது உடல் வலிமையான ஆட்கள் செய்யக்கூடிய விஷயமாகும். ஆனால் அவற்றை தாங்களே செய்வதாக இந்த குழுவினர் முன் வந்தனர். முதலில் எனக்கு யோசனையாக இருந்தாலும் இப்போது அதை சாதித்து காட்டியுள்ளனர்.

இவர்களை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளேன். அதில் வரும் காசில் அவர்களுக்கு வீடு கட்டி தர உள்ளேன். தற்சமயம் இவர்களுக்கு என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன் என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

To Top