அந்த மாதிரி விஷயம் எதுவுமே என் படத்தில் இருக்க கூடாது!.. லோகேஷிற்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட ரஜினிகாந்த்!.

Rajinikanth : தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் போதை பழக்கத்திற்கு எதிரான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி தனது திரைப்படங்களில் போதை பொருள் தொடர்பான விஷயங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்.

இது கைதி திரைப்படத்தில்தான் துவங்கியது. கைதி திரைப்படத்திற்காக தமிழகத்தில் நடக்கும் போதை மாஃபியா குறித்து நிறைய ஆய்வுகளை செய்தார் லோகேஷ் கனகராஜ். அப்பொழுது அவருக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தன. அதனை தொடர்ந்து இதற்கு எதிரான விழிப்புணர்வை தனது திரைப்படங்களில் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்த லோகேஷ் இப்போது வரை அவர் எடுக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அதற்கு எதிரான கருத்துக்களை வைக்கிறார்.

ஆனால் ரஜினி திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார் ரஜினி. இது குறித்து லோகேஷிடம் பேசி இருக்கும் ரஜினி தனது திரைப்படம் மற்ற லோகேஷ் கனகராஜ் திரைப்படம் போல இல்லாமல் மாறுதலாக இருக்க வேண்டும்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

முக்கியமாக போதைப்பொருள் தொடர்பான எந்த ஒரு விஷயமும் தனது திரைப்படத்தில் இருக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார் ரஜினி. மேலும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சோடு தனது திரைப்படத்திற்கு எந்த ஒரு தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு திரைப்படமாகத்தான் ரஜினியின் திரைப்படம் இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இதனை ஒரு விதிமுறையாக லோக்கேஷிடம் கூறியிருப்பதால் தற்சமயம் திரைக்கதையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறாராம் லோகேஷ் .

ஏற்கனவே தற்சமயம் ரஜினிகாந்த் வேட்டை என்கிற திரைப்படத்தில் நடித்து வருவதால் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து லோகேஷ் கனகராஜின் திரைப்படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு படத்திற்கும் நடுவே ஒரு மாதம் ரஜினிகாந்த் விடுமுறை எடுத்துக் கொள்வதால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் லோகேஷ் கனகராஜின் படம் துவங்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.