ரூம் கிடைக்காமல் நின்ன சிரஞ்சீவிக்கு ரஜினி செய்த உதவி.. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்.!

Tamil Cinema News

2000 களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிய முன்னேற்றம் என்று எதுவுமே கிடையாது. நடிகர்களின் சம்பளங்களில் துவங்கி அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் வரை பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தான் இருந்தது.

கேரவன் என்கிற சொகுசு வாகனங்கள் வாகன வசதியே மிக தாமதமாக தான் தமிழ் சினிமாவிற்கு வந்தது அதற்கு முன்பெல்லாம் ஒரு குடையை போட்டு நாற்காலியில் அமர்ந்துதான் நடிகர்கள் ஓய்வெடுப்பார்கள் என்கிற நிலை இருந்தது.

இந்த நிலையில் ரஜினி மற்றும் சிரஞ்சீவி சேர்ந்து நடித்த சமயத்தில் நடந்த நிகழ்வை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினியையும் சிரஞ்சீவியையும் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றோம்.

rajinikanth
rajinikanth

அந்த சமயங்களில் பொள்ளாச்சியில் பெரிதாக நட்சத்திர ஹோட்டல்கள் என்று எதுவும் கிடையாது. எனவே நடிகர்களை கிடைத்த ஹோட்டல்களில் தான் தங்க வைத்தோம். அப்பொழுது ரஜினிகாந்துக்கு கொஞ்சம் பெரிய அறை ஒன்று கிடைத்துவிட்டது.

ஆனால் சிரஞ்சீவிக்கு பெரிய அறை  கிடைக்கவில்லை சின்ன அறை தான் கிடைத்தது. இந்த விஷயத்தை அறிந்த ரஜினிகாந்த் நமது மாநிலத்திற்கு விருந்தாளியாக சிரஞ்சீவி வந்திருக்கிறார். எனவே அவரை பெரிய அறையில் தங்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.