Connect with us

ஒரு வசனத்தை 100 தடவை மனப்பாடம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்ன வசனம் அது!..

rajinikanth

Cinema History

ஒரு வசனத்தை 100 தடவை மனப்பாடம் செய்த ரஜினிகாந்த்… அப்படி என்ன வசனம் அது!..

cinepettai.com cinepettai.com

Actor Rajinikanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்னொரு பழக்கமும் உண்டு.

எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் கூட அவர்கள் திரைப்படம் நன்றாக இல்லை என்னும் பட்சத்தில் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள் ரசிகர்கள். இந்த பயத்தின் காரணமாகவே நடிகர்கள் தொடர்ந்து நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்சமயம் ஒரே டேக்கில் ஒரு காட்சியை நடித்துக் காட்டக்கூடியவராக ரஜினிகாந்த் இருந்தாலும் ஆரம்ப காலகட்டங்களில் அவர் அப்படி கிடையாது சினிமாவிற்கு வந்த போது அவருக்கு நேரடியாக சினிமாவிற்கு வர முடியாது முதலில் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற விஷயம் தாமதமாக தான் தெரிந்தது அதன் பிறகு ஒரு பயிற்சி பட்டறையில் சேர்ந்து நடிப்பதற்கு கற்றுக் கொண்டார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தான் அவருக்கு கமல்ஹாசனுடன் அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.

ரஜினிகாந்திடம் ஒரு நல்ல நடிப்பு திறன் இருப்பதை அப்பொழுது பாலச்சந்தர் அறிந்திருந்தார் ஒரு காட்சியில் கமல்ஹாசன் கையில் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சாவி கீழே விழும். அப்பொழுது ரஜினியை பார்க்கும் அவர் நீ யார் என்று கேட்கும் பொழுது நான் பைரவியின் கணவன் என்று ரஜினிகாந்த் கூறுவதாக வசனம் ஒன்று இருக்கும்.

இதுதான் முதன் முதலில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட வசனம் இந்த வசனத்தை சரியாக பேச வேண்டும் என்பதற்காக வீட்டில் முதல் நாளே அமர்ந்து ஒரு நூறு தடவை அந்த வசனத்தை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தார் ரஜினிகாந்த்.

அதன் பிறகு மறுநாள் படப்பிடிப்பிற்கு சென்ற பொழுது பாலச்சந்தரை பார்த்து அவருக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக அந்த ஒரு வசனத்தை கூட தவறாகதான் பேசியிருந்தார் ரஜினிகாந்த். பிறகு இரண்டு மூன்று தடவை அந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகுதான் ரஜினி சரியாக அந்த வசனத்தை பேசினார்.

கேமராவை விடவும் அப்பொழுது அவர் பாலச்சந்தரை பார்த்துதான் அதிகமாக பயந்ததாக ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட உழைப்பு தான் ரஜினிகாந்த் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு காரணமாக அமைந்தது.

To Top