rajinikanth editor mohan

Rajinikanth : எதுக்கு சார் படத்துக்கு இவ்வளவு செலவு செஞ்சுருக்கீங்க!.. தயாரிப்பாளர் பதிலால் ஆடிப்போன ரஜினிகாந்த்!.

News Tamil Cinema News

Rajinikanth : ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அதிக அனுபவம் கொண்ட ஒரு முக்கியமான நடிகராவார். ஒரு திரைப்படத்தை பொறுத்தவரை ரஜினிகாந்தின் கருத்துக்களை நிறைய இயக்குனர்கள் கேட்பதுண்டு. ஏஎனெனில் சினிமாவில் அவ்வளவு அனுபவம் பெற்றவர் ரஜினிகாந்த்.

தனது மகன் ஜெயம் ரவியை வைத்து படம் தயாரிக்க நினைத்தப்போது எடிட்டர் மோகனுக்கு அதை கொஞ்சம் சிறப்பான படமாக தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும் அந்த படத்தை தனது மூத்த மகன் மோகன் ராஜா இயக்க வேண்டும் என்று தீர்வானது.

எனவே ஜெயம் திரைப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவானது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற வேண்டும். அதே சமயம் ஆக்‌ஷன் ஹீரோவிற்கு உள்ள அம்சத்தையும் காட்ட வேண்டும் அதற்கு தகுந்தாற் போல கதையம்சத்தை தயார் செய்தனர்.

இந்த நிலையில் படத்தை முடித்த பிறகு ஒரு ப்ரிவீவ் காட்சி ஏற்பாடு செய்து அதற்கு கிளம்பினார் எடிட்டர் மோகன். அப்போது இந்த செய்தியை எப்படியோ அறிந்துக்கொண்ட ரஜினிகாந்த். எடிட்டர் மோகனுக்கு போன் செய்து சார் ஏதோ புது படம் எடுத்திருக்கீங்களாம், இன்னிக்கு ஷோ போடுறீங்களாம். நான் சும்மாதான் இருக்கேன் வரவா என கேட்டுள்ளார்.

ரஜினிகாந்தே கேட்டப்பிறகு வரவேண்டாம் என எப்படி கூற முடியும். சரி வாங்க என கூறிவிட்டார் எடிட்டர் மோகன். ரஜினி வந்து படத்தை முதல் பாதியை பார்த்தார். பிறகு தயாரிப்பாளரிடம் பேசிய ரஜினி படம் சிம்பிளான கதை இன்னமும் குறைவான பட்ஜெட்டில் எடுத்திருக்கலாம் என கூறினார்.

அப்போது பதிலளித்த தயாரிப்பாளர், சார் இது என் மூத்த மகன் தயாரித்து என் இளைய மகன் நடிக்கும் படம் சார். அவங்க வாழ்க்கையே இந்த படத்தில்தான் இருக்கு என கூறினார். உடனே அதிர்ச்சியானா ரஜினிகாந்த். ஏனெனில் அவருக்கு அதுவரை அவரது மகன்களின் படம்தான் அது என தெரியாது. பிறகு படம் நன்றாக உள்ளது என வாழ்த்தினார் ரஜினிகாந்த்,