Connect with us

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

Cinema History

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

Social Media Bar

தமிழில் உள்ள கமர்ஷியல் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்கள் நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்துள்ளன.

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா திரைப்படத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை தூக்கிவிட்ட ஒரு திரைப்படமாக ரமணா இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு அதிரிபுதிரியான ஹிட் கொடுத்த திரைப்படம் ரமணா.

அப்போது நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கு விஜயகாந்த் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எனவே விஜயகாந்திற்காக அவர் ஒரு கதையை எழுதினார். அந்தக் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் கொண்டு சென்று காட்டினார்.

அந்தக் கதையை படித்த உடனேயே தயாரிப்பாளருக்கு பிடித்து விட்டது அந்த கதை மிகவும் நன்றாக உள்ளது என்று அவர் ரமேஷ் கண்ணா விடம் கூறினார். அதன் பிறகு அந்தக் கதையை விஜயகாந்த்திடம் கூறுமாறு கூறினார். ரமேஷ் கண்ணாவிடம் கதையைக் கேட்ட விஜயகாந்த் இந்த கதை பிரமாதமாக இருக்கிறது இதில் நான் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் காரணமாக நேரம் கிடைக்காததால் அந்தக் கதையில் விஜயகாந்த் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு அந்தக் கதை கே எஸ் ரவிக்குமார் அவர்களின் கைக்கு வந்து அவர் அதை சூர்யாவை வைத்து ஆதவன் என்கிற பெயரில் திரைப்படம் ஆக்கினார். ஒருவேளை அதற்கு முன்பே விஜயகாந்த் நடித்து வெளிவந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top