Connect with us

சட்டத்தை ஏமாத்தி திருமணம் செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. வழக்கு தொடர்ந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை!.. இப்படியும் நடந்துச்சா!..

mgr ramesh kanna

Cinema History

சட்டத்தை ஏமாத்தி திருமணம் செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.. வழக்கு தொடர்ந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை!.. இப்படியும் நடந்துச்சா!..

Social Media Bar

Actor MGR: தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் மரியாதையையும் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்திருப்பதால் அரசியல் வாதியாக பலருக்கும் பிடித்த பிரபலமாக எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் குறித்து நடிகரும், உதவி இயக்குனருமான ரமேஷ் கண்ணா சில சுவாரஸ்யமான தகவல்களை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது நடிகர் எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியான ஜானகி என்னுடைய அத்தை மகள்தான், என்னுடைய அப்பாவின் சகோதரியின் மகள்தான் ஜானகி.

ஜானகி சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் என்பதால் அவருக்கு ரமேஷ் கண்ணாவின் தந்தைதான் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமானார் ஜானகி. பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

mgr-2
mgr-2

இந்த விஷயம் ரமேஷ் கண்ணாவின் தந்தைக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே திருமணம் செய்த ஒரு நபர் எதற்கு தனது சகோதரி மகளையும் திருமணம் செய்கிறார் என கோபமடைந்தார். இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆரின் திருமணம் சட்டப்படி செல்லாது என கூறி வழக்கு தொடர்ந்தார் ரமேஷ் கண்ணாவின் தந்தை.

வழக்கின் முடிவுகள் ரமேஷ் கண்ணாவின் தந்தைக்கே சாதகமாக அமைந்தன. இதனால் அவர்கள் திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இருந்தாலும் கூட எம்.ஜி.ஆரை பிரிய முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார், வி.என் ஜானகி.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top