Actress
உங்களை மகிழ்விப்பதற்காக எப்படியான வேலையை செய்கிறேன் என எனக்குதான் தெரியும்? – மனம் உடைந்த ராஷ்மிகா.!
இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர்.

தெலுங்கு சினிமாவில் இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் நடிக்க துவங்கியுள்ளார். கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்சமயம் நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
அனைத்து நடிகைகளுக்கும் வருவது போலவே நடிகை ராஷ்மிகாவிற்கும் நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வருவதுண்டு. இதனால் மனமுடைந்த ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை குறித்து பேசியுள்ளார்.

“என் வாழ்க்கையை சினிமாவில் துவங்கிய நாள் முதலே எதிர்மறையான விமர்சனங்களை கண்டு வருகிறேன். அனைவரும் என்னை விரும்ப வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால் உங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்விப்பதற்காக நான் எவ்வளவும் கஷ்டப்படுகிறேன் என்பது எனக்குதான் தெரியும். எப்போதும் என்னை கேலி செய்வது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது.
என்னை சுற்றி உள்ள பலரும் என்னிடம் அன்பாக இருந்தாலும் கூட சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவது மன வருத்தமாக இருக்கிறது”

இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
