pushpa

நயன்தாராவை ஓரம் கட்டிய ராஷ்மிகா.. புஷ்பா 2 வுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். கீதா கோவிந்தம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமே தென் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக மாறியவர் ராஷ்மிகா.

கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கில் வெளியான திரைப்படம் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதற்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் மாதிரியான நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியானது.

அதன் மூலம் ராஷ்மிகா பிரபலம் அடைந்தார். பிறகு நேரடியாகவே தமிழில் நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். பிறகு சில காலங்கள் தமிழில் நடிக்காமல் இருந்ததார் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்தார்.

புஷ்பா 2 சம்பளம்:

rashmika

தற்சமயம் பாலிவுட் வரை சென்று நடித்து வரும் ராஷ்மிகா புஷ்பா திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் வரவேற்பு பெற்றார். இப்பொழுது புஷ்பா 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் இவரது சம்பளம் எவ்வளவு என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது இதற்கு ராஷ்மிகாவே பதில் அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது புஷ்பா முதல் பாகத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்த இரண்டாம் பாகத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று கூறுகிறார் ராஷ்மிகா.

மிகக்குறுகிய காலத்திலேயே நயன்தாராவின் சம்பளத்தை தொட்டுவிட்டார் ராஷ்மிகா என்று இது குறித்து பதில் அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.