நான் கராத்தே கத்துக்க போறேன்! – ராஷ்மிகாவின் புது லுக்!

2016 முதல் வெள்ளி திரையில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா. 2016 முதலே படங்களில் நடித்து வந்தாலும் கூட 2018 இல் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் ராஷ்மிகா. டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா என தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையே நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவருக்கு கதாநாயகியாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்சமயம் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ராஷ்மிகா ட்ரெண்ட் ஆகும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh